Ad Code

Responsive Advertisement

பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்லைன்' புகார் வசதி


புதுடில்லி: 'பொறியியல் கல்லுாரிகள், 'ஆன்லைனில்' புகார்களை பெற்று, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி பெற்று, அதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுத், பொறியியல் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: பொறியியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் பிறர், தங்கள் குறைகளை ஆன்லைனில் புகார்களாக தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். இணையதளம், இ - மெயில் உள்ளிட்டவற்றின் மூலம் புகார்களை அனுப்ப வசதி செய்ய வேண்டும். இவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க, கல்லுாரிகளில் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவினர் அவ்வப்போது கூடி, புகார்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும். இந்த விபரங்களை அனைவரும் அறியும்படி, கல்லுாரி அறிவிப்பு பலகையில் தகவலாக இடம்பெறச் செய்ய வேண்டும். ஆன்லைன் புகார் பெறும் நடைமுறைக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஏ.ஐ.சி.டி.இ.,யிடமிருந்து பொறியியல் கல்லுாரிகள் ஒப்புதல் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement