Ad Code

Responsive Advertisement

தொழிற்கல்வி படிப்புகளில் துணை ராணுவப் படையினரின் குழந்தைகளுக்கும் உரிய இட ஓதுக்கீடு: அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு


தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில், ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினரின் குழந்தைகளுக்கு வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவுகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் பி.சாந்தகுமார் என்பவர்தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு வழங்குவதைப் போல, ஓய்வு பெற்ற துணை ராணுவப் படை வீரர்களின் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், முன்னாள்ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது போல, துணை ராணுவப் படை வீரர்களின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடை வழங்க வேண்டும் என, கடந்த 2012-ஆம் ஆண்டுநவம்பரில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபற்றி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என்றார்.இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் முடிவை எடுக்க வேண்டும் என்றும், சலுகையை வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement