Ad Code

Responsive Advertisement

ஆதார் எண்ணை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் கவனத்திற்கு

கோவை மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் ஆதார் எண் சமர்ப்பிக்காத 2,260 ஓய்வூதியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட கருவூல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில் 2,260 பேர் அவர்களது ஆதார் எண்ணை கருவூலங்களில் சமர்ப்பிக்கவில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கு ஜீவன் பிரமான் மூலமாக மின்னணு வாழ்வு சான்றிதழ் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் கருவூலங்களில் இருந்து தொலைப்பேசி வாயிலாக ஆதார் எண் சமர்பிக்காத ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு அவர்களது ஆதார் எண் பெறப்பட்டு வருகிறது. எனவே இதுவரையில் ஆதார் எண்ணை சமர்பிக்காத ஓய்வூதியர்களும், புதிதாக ஆதார் எண் பெறப்பட்டு அதனை சமர்ப்பிக்காதவர்களும் உடனடியாக ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

4 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement