Ad Code

Responsive Advertisement

விளையாட்டுகளில் தமிழகம் முன்னேற்றம் பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமிதம்

''தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.பள்ளிகளுக்கான மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் காரைக்குடியில் நேற்று துவங்கின.

துவக்கி வைத்துஇயக்குனர்கண்ணப்பன் பேசியதாவது:

மூன்று ஆண்டுக்கு முன் பள்ளிகளுக்கான விளையாட்டுக்கள் குறுவட்ட அளவில் நடந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அளவில் நடத்தச் செய்தார். கடந்த 2012--13-ல் பள்ளி கல்வித்துறைக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; 2016--17ல் 24 ஆயிரத்து 121 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.மாணவர் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டி உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி அளவில் 14 விளையாட்டுக்கள் மட்டுமே பல ஆண்டுகளாக இருந்தன. அதில், 15 புதிய விளையாட்டுகளை புகுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. செஸ் போன்ற விளையாட்டுகளிலும் கிராம மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 57 தங்கம், 58 வெள்ளி, 64 வெண்கல பதக்கங்களை வென்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறையில், விளையாட்டு போட்டிகளுக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2012--13-ல் தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தா-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு பேசினார்.

அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, இணை இயக்குனர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement