Ad Code

Responsive Advertisement

புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு ‘அம்மா’ அறிவியல்-கணித உபகரணங்கள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு 'அம்மா' அறிவியல் மற்றும் கணித உபகரணங்கள்ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
அறிக்கை வெளியீடு கல்வி நிலையின் ஆண்டறிக்கை (கிராமப்புறம்) என்ற தன்னார்வ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளில் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கைவெளியிட்டு வருகிறது.


இந்த அமைப்பின் 2016-ம் ஆண்டு கல்வி நிலை ஆண்டறிக்கையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பண்டியராஜன் நேற்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையை திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற அமைப்பின் தமிழக தலைமை அதிகாரி ஜாப்சக்காரியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:- கல்வி நிலையின் ஆண்டறிக்கை அமைப்பு 2010-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களை வைத்து நான் சட்டசபையில் பேசினேன். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, என்னுடைய கருத்துகளை உள்வாங்கி, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 'கற்றது மறந்து நிற்பதுகல்வி' என்று கல்வி விளைவுக்கு அருமையான விளக்கத்தை கூறி இருக்கிறார். இந்த ஆண்டு ஆய்வு அறிக்கையை பார்க்கும்போது, தமிழக குழந்தைகளின் கல்வித்திறன் முன்னேறி வருகின்றன. அதேநேரம், எந்த மாவட்டங்களில் கல்வித்திறன் பின்தங்கியுள்ளது?, அதற்கு காரணம் என்ன? என்பதை அடுத்த ஆண்டு ஆய்வின்போது இந்த அமைப்பு தெளிவுப்படுத்த வேண்டும். நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள், 'பிளாஸ்டிக்' பொருட்களை வைத்து கழிவறையை எப்படி கட்டுவது? என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாணவர்களின் இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அரசும் பல உதவிகளை செய்து வருகின்றன. தற்போது அம்மா அறிவியல் உபகரணம், அம்மா கணித உபகரணம் என்ற இருவகை பாடங்களுக்குரிய உபகரணங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் ஒரு மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement