Ad Code

Responsive Advertisement

யார் இந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்?





உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவை, முதல்வர் பதவிக்கு வரவிடாமல், திறமையாக முறியடித்த, கவர்னர் வித்யாசாகர் ராவ், மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய அனுபவம் உள்ளவர்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில், தெலுங்கானா பகுதி, கரீம் நகர் மாவட்டம், நகரம் ஊரில், 1942 பிப்., 12ல் பிறந்தவர் வித்யாசாகர் ராவ். 
ஐதராபாத்தில் பள்ளிப்படிப்பும், புனேயில் பட்டப்படிப்பும், ஐதராபாத் உஸ்மானியா பல்கலையில், சட்ட படிப்பும் முடித்தவர். 
1973 முதல், வழக்கறிஞராக இருந்தார். மாணவ பருவத்தில், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றியுள்ளார். உஸ்மானியா பல்கலை மாணவர் தலைவர் தேர்தலில், வெற்றி பெற்றுள்ளார். 1975ல், நெருக்கடி காலத்தில் சிறை சென்று உள்ளார்.
கடந்த, 1985 முதல், 1998 வரை, ஆந்திர சட்டசபையில், மேட்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,-வாகவும், 1998ல், ஆந்திர மாநில பா.ஜ., தலைவர், பின், கரீம் நகர் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். 

பின், 1999 முதல், 2004 வரை, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில், உள்துறை இணை அமைச்சராக இருந்தார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பதவிகளையும் வகித்தார்.பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்ததும், மஹாராஷ்டிரா கவர்னராக, 2014 ஆக., 30ல் நியமிக்கப்பட்டார்.
 

 பதவியேற்ற ஒரு மாதத்தில், மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் பிரிதிவிராஜ் சவான், செப்., 26ல், ராஜினாமா செய்தார்.
 
அதை வித்யாசாகர் ஏற்று, ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். 2016, செப்., 2 முதல், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக, நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவுக்கு, வினோதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
 
 மூன்று சகோதரர்கள், எட்டு சகோதரிகள் உள்ளனர். இவரது சகோதரர் ராஜேஷ்வர் ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர்.மற்றொரு சகோதரர் ஹனுமந்த ராவ், திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஐதராபாத் மத்திய பல்கலையின் முன்னாள் துணை வேந்தராக, பதவி வகித்துஉள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement