Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு.

பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும். அதற்குள் மாணவர்கள் விடை எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்துக்கு ஏற்ப விடைத்தாள்களில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இதன்படி குறிப்பிட்ட பக்கங்களில் மட்டுமே மாணவர்கள் விடை எழுதி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.மொழிப்பாடத்தை பொறுத்தவரையில் 30 பக்கம் கோடிட்ட தாள் வழங்கப்படும். கூடுதல் தாள் தேவைப்பட்டால் கோடிட்ட தாள்தான் வழங்கப்படும். உயிரியல் மற்றும் உயிரி-உயிரியல் பாடங்களை பொறுத்தவரையில் தனித்தனியாக விடை எழுதும் வகையில் விடைத்தாள் தயாரிக்கப்படுகிறது. உயிரியலுக்கு 22 பக்கம் ஒதுக்கப்படுகிறது, உயிரி-உயிரியல் பாடத்துக்கு 22 பக்கம் மற்றும் 4 பக்கம் என 26 பக்கம் ஒதுக்கப்படுகிறது.இவை ஒரே புத்தகமாக தைக்கப்பட்டு வழங்கப்படும். அந்தந்த பாடப்பிரிவு எடுத்துள்ள மாணவர்கள் தனித்தனியாக விடை எழுத வேண்டும். கணினி அறிவியல் பாடத்துக்கு ஓஎம்ஆர் தாள் வழங்கப்படும். அதில் 30 பக்கம் இடம் பெறும். கணக்குப் பதிவியல் பாடத்திற்கு 14 பக்கங்கள் வெள்ளைத்தாளும், 15ம் பக்கத்தில் இருந்து 46 பக்கம் வரை கோடிட்டும் வழங்கப்படும்.

இதர பாடங்களுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். புவியியல் பாடத்துக்கு 36 பக்கம் ஒதுக்கப்படுகிறது. வணிக கணித பாடத்துக்கு 37 பக்கங்கள் ஒதுக்கப்படுகிறது. இதற்குள் தான் மாணவர்கள் விடை எழுத வேண்டும்.எழுத்துகள் பெரிதாக எழுதும் போது கூடுதல் தாள் தேவைப்பட்டால் வழங்கப்படும். தேர்வில் முறைகேடுகள் மற்றும் காப்பி அடித்தலை தடுக்கும் வகையில் கேள்வித்தாள் A, B என இரண்டு வரிசைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement