Ad Code

Responsive Advertisement

15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மதுரையில் தினமலர் நடத்துகிறது

தமிழக போலீஸ் துறையில், 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, மே 21ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை முகாம், தினமலர் சார்பில் நாளை( பிப்.,18) மதுரையில் நடக்கிறது.


இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம் நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.,22. இத்தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 100. இதில் எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.எழுத்துதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடக்கும்.வாசகர்கள், எழுத்து தேர்வில் வென்றிடும்விதமாக வழிகாட்ட, ஆலோசனை நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. நாளை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது.

அனுமதி இலவசம்.மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் டாக்டர் அருண்சக்திகுமார் துவக்க உரை நிகழ்த்துகிறார். தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள், முக்கிய கேள்விகள், பாடமுறைகள் குறித்து நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் விளக்குகிறார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement