Ad Code

Responsive Advertisement

ஒரே நேரத்தில் 104 செயற்கை கோளை செலுத்தி சாதனை : புதிய வரலாறு படைத்தது 'இஸ்ரோ


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' நேற்று, 'பி.எஸ்.எல்.வி., - சி ௩௭' ராக்கெட் மூலம்,104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, புதிய சாதனை படைத்தது. இஸ்ரோ வரலாற்றில், இது புதிய மைல் கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியாக, செயற்கை கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'பி.எஸ்.எல்.வி., - சி 37' என்ற ராக்கெட் மூலம், பூமி ஆய்விற்காக, இந்தியாவின், 'கார்டோசாட் - 2' செயற்கை கோளை, நேற்று, 9:28 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


இந்த செயற்கை கோளுடன், இந்தியா - 2, அமெரிக்கா - 96, இஸ்ரேல் - 1, கஜகஸ்தான் - 1, நெதர்லாந்து - 1, சுவிட்சர்லாந்து - 1, ஐக்கிய அரபு எமிரேடு - 1 என, ஏழு நாடுகளின், ௧௦௩ செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்ட, 17வது நிமிடத்தில், 'கார்டோசாட் - 2' செயற்கை கோள், பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்திலும், மற்ற செயற்கை கோள்கள், 18, 28வது நிமிடங்களில், 524 கி.மீ., உயரத்திலும் நிலை நிறுத்தப்பட்டன. பூமி ஆய்வு : இதற்கு முன், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஒரே முயற்சியில், 37 செயற்கை கோள்களை அனுப்பியது சாதனையாக இருந்தது. தற்போது, ஒரே முயற்சியில், 10௪ செயற்கை கோள்களை அனுப்பியதன் மூலம், 'இஸ்ரோ' அந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 2015 ஜூனில், ஒரே முயற்சியில், 23 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

'கார்டோசாட் - 2' செயற்கை கோள், 714 கிலோ எடை உடையது. பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமி ஆய்வு, நதி நீர் மேம்பாடு, நில பயன்பாட்டு வரைபடங்கள் தயாரித்தல், சாலை இணைப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். திறமை : இது குறித்து, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றொரு முறை, தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர்.

தற்போது, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள்களில், 77 செயற்கை கோள்கள் செயல்பட துவங்கி விட்டன. இதுவரை, இஸ்ரோ செலுத்திஉள்ள, 229 செயற்கை கோள்களில், 179 செயற்கை கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நம் விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். தங்களின் திறமையை, மற்றொரு முறை நிரூபித்துள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், 'இஸ்ரோவின் சாதனை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement