Ad Code

Responsive Advertisement

PAN Card கட்டாயம்: வருமான வரித்துறை

வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்'என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு: இதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: 

< கடந்த,2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களில், பான் எண் குறித்த தகவல்கள்

தராதவர்களிடம், அதை, பிப்ரவரி இறுதிக்குள் பெற்று, அனுப்ப வேண்டும். வங்கிகள் மட்டுமின்றி, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், 2020ல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு,பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்கள்தேவையற்றதாகி விடும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும், கட்டை விரல் ரேகையை பதிவு செய்வதுடன், 30 வினாடிகளில்முடிந்து விடும். உலகில், 100 கோடி மொபைல் போன்கள், 100 கோடி, 'பயோ மெட்ரிக்' இயந்திரங்கள் உடைய ஒரே நாடு, இந்தியா.

- அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement