Ad Code

Responsive Advertisement

NEET Exam:நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

  முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.எனவே நீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement