Ad Code

Responsive Advertisement

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றி ஆய்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க கேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்று அலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றி கேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்க வைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில் இடம் இல்லை. தங்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பது பெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement