Ad Code

Responsive Advertisement

நாளை பிரதமரை சந்திக்கிறேன்: ஓ.பி.எஸ்

சென்னை: ‛ நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்' என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


முதல்வர் அறிக்கை:


இன்று(ஜன.,18) மாலை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், தங்களின் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றால், உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.

நாளை காலை டில்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement