Ad Code

Responsive Advertisement

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பிடல் முறை' மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு | பள்ளி மாணவர்களிடம் எதிர்நோக்கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வகுப்புவாரியாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த வளர்ச்சியை மதிப்பிட இதுபோன்ற கற்றல் குறியீடுகள் பயன்படுத்தப் படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையி லான மாணவர்களிடம் எதிர் நோக்கும் 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகளும் கோரப் பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, 2017-18 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, தொகுக் கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வித் திட்டத்தில் இணைக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரைவு அறிக்கை, தொடக்க நிலை வரையிலான மொழிப் பாடங்கள், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங் களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்்ஷா அபியான்) திட்டத்தை கண் காணிப்பதற்கான 'ஷாகன்' எனப் படும் புதிய வலைதள அமைப்பை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தபோது அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை வெளியிட்டார். ஜவடேகர் மேலும் கூறும்போது, ''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வடிவமைத்த கற்றல் திறன் மதிப் பிடல் திட்டம், அந்தந்த வகுப்பு களில் ஆசிரியர்களுக்கு உதவுவ தோடு மட்டுமல்லாமல், மாணவர் களின் கல்வியை மேம்படுத்த திட்டமிடும் பெற்றோர், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசுத் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பயன்படும். பல்வேறு படிநிலைகளில் மாணவர்களின் நிலையை தனிப் பட்ட முறையிலும், ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப் பிட வசதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement