Ad Code

Responsive Advertisement

வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும்,


'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது.


அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்தியஅரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்."

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement