Ad Code

Responsive Advertisement

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், போட்டித்தேர்வு களுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், புரிதல் திறனை மேம்படுத்தவும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநில அனை வருக்கும் கல்வி திட்ட இயக்குநர்பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் தொடக்க, நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி ஜனவரி 11-ம் தேதியும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு களுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 12-ம் தேதியும் நடைபெறும். கடந்த முறை மாநில அளவில் பங்கேற்ற கருத்தாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

 மேலும், மாவட்ட அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கு ஜனவரி18-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 19-ம்தேதியும் நடத்தப் படும்.இதேபோல், குறுவள மைய அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி 21-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வுக ளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 22-ம் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement