Ad Code

Responsive Advertisement

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை

''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 12வது மாநில மாநாடு, 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டில், அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி பேசியதாவது:தமிழகத்தில், குறைந்த சம்பளத்துடன், 25 ஆண்டுகளாக, கடும் பணிச்சுமையில், மூன்று லட்சம் பகுதி நேர ஊழியர்கள் தவித்து வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்; இல்லையேல், தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்., 2ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; மார்ச், 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி; ஏப்ரல், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement