Ad Code

Responsive Advertisement

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 
பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில்பணியாற்றும் ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன. 

இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், 2015, பிப்ரவரியில் மீண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டுக்குழு உருவானது.

 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' எனக்கோரி, 2016ல், மார்ச் வரை, தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement