Ad Code

Responsive Advertisement

கல்விக்கு கை கொடுத்த சிறுவர் மலர்


கடந்த, 2016 டிசம்பர் 9, 'தினமலர் -
சிறுவர் மலர்' இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்' பகுதியில், 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். ஜானகி மற்றும் அவரது மகனின் வருகையைப் பாராட்டியதோடு, உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா, ஆசிரியை, செல்வமீனாள் ஆகியோர் பள்ளியின் சார்பாக, இருவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இது குறித்து ஜானகி கூறியதாவது: பல ஆண்டுகளாக, 'தினமலர்' படித்து வருகிறேன்; 'சிறுவர் மலர்' இதழின் தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, சிறுவர்மலர் இதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜானகியின் மிகப்பெரிய உதவிக்கு, ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார், மாணவி தனலட்சுமி.
- நமது நிருபர் -

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement