Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்

''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.

இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்கு முன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில் நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலி இடங்கள் நிரப்பப்படும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்று கூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement