Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களை, ஆசிரியர் பணியை கொச்சை படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டுள்ள இப்பதிவிற்கு ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் பதில்

ஆசிரியர்களை பற்றி இப்படி தவறான தகவல் வெளியிடுபவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


ஆசிரியர் பணி குறித்து கேவலமாக பதிவிடும் நபர்களுக்கு பதில் தருவது எனது கடமை...

குறிப்பு: அவதூறு செய்பவர்களின் மனதைப் பண்படுத்தவே புண்படுத்த அல்ல...

இன்னும் பல தகவல்கள் எனக்கு தெரியாமல் இருக்கலாம்... கூறுங்கள் தெரிந்து கொள்கிறேன்... நன்றி!

நன்றி : திரு.பிரின்ஸ் அவர்கள்
 அரசுப்பள்ளி ஆசிரியர் 




* பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில்,எந்த ஒரு தவறான செய்தியையும் எளிதில் பரப்பிவிடலாம்.*
*அதுபோன்ற ஒரு தவறான செய்திதான் இதுவும்.
முதலில் இதில் உள்ள தவறுகளைச் சுட்டுகின்றேன்*
*ஓர் ஆண்டிற்கு ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ விடுப்பு -15 நாட்கள்*
*இந்த மருத்துவ விடுப்பையும் பெரும்பாலான ஆசிரியர்கள் எடுப்பதில்லை.அத்தியாவசியமாக அல்லது ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மட்டுமே இந்த விடுப்பை எடுக்கின்றனர்.*

*EL என்று சொல்லப்பட்டிருக்கும் (Earned Leave)விடுப்பும் வருடத்திற்கு -15 நாட்கள்தான்.இதுவும் பெரும்பான்மையான ஆசிரியர்களால் எடுக்கப்படுவதில்லை.*
*சனி,ஞாயிறுகளைப் பொறுத்தவரை வருடத்தின் 52 வாரங்களிலும் வரும் சனி,ஞாயிறுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி 104 என அந்த அதிமேதாவி தந்துள்ளார்.இதுவும் தவறு.*
*ஏனென்றால்,தொடக்கநிலைப் பள்ளிகள் வருடத்திற்கு 220 நாட்களும்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வருடத்திற்கு 210 நாட்களும் கட்டாயம் பணிபுரிய வேண்டும். அந்தவகையில் கட்டாயம் சாராசரியாக மாதம் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளி இயங்குகிறது.*
*மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சி வகுப்புகள் வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கின்றது.*
*அடுத்ததாக,மழை,வெயில் மற்றும் மாவட்ட ஆட்சியரால் விடப்படும் உள்ளூர் விடுமுறைகள் எல்லாமே Compensate Holidays ஆகத்தான் வரும்.கட்டாயம் இந்த விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளிகள் வைத்து ஈடுசெய்ய வேண்டும்.*
*அடுத்ததாக Tour,Sports day மற்றும் Annual day இவைகளுக்கென்று தனியாக விடுமுறை விடப்படுவதில்லை.விடுமுறை நாட்களிலையோ அல்லது பள்ளி நாட்களிலையே நடத்தப்படும்.இந்த நாட்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் விடுப்பில் இருக்க முடியாது.பணியில்தான் இருக்க வேண்டும்.*
*அடுத்ததாக,அரசு விடுமுறை என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல.ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும்தான். அதுபோலத்தான் 12 நாட்கள் தற்செயல் விடுப்பும் (CL) அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.*
*முழுஆண்டுத் தேர்வுக்கான விடுமுறை 40 நாட்கள் என்பது தவறு.மே மாதம் மட்டும் விடுமுறை.அந்த விடுமுறையிலும்,மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துவது,மாணவர்களுக்கு ரிசல்ட் போடுவது,அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற பணிகள் நிறைந்துள்ளன.*
*அடுத்ததாக,நாள் ஒன்றுக்கு ஆசிரியர்களின் பணிநேரம் நான்கு மணிநேரம் என்பது நவீன குமாராசாமியின் கருத்து தவறு*
*பயிற்சி வகுப்புகளுக்கு அப்பாற்பட்டு பள்ளி அலுவல் நேரம்*
*தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு காலை 9.10 முதல் 4.10 வரை*
*உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு காலை 9.30 முதல் மாலை 4.40 வரை பள்ளி செயல்படும்.*
*இந்த பள்ளி நேரங்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் 7 மணி நேரம் பணிபுரிய வேண்டும்.*
*LTC (Leave Travel Concession) -90% ஆசிரியர்கள் எடுப்பதில்லை.*
*வக்கனையாக, ஆசிரியர்களைப் பற்றி மட்டும் அவதூறாக குறைகாண வேண்டாமே*

Post a Comment

2 Comments

  1. I HAVE known A TEACHER who did not take even one day cl in her 36 years of her service I SALUTE TO HER NOBLE TEACHING PROFESSION

    ReplyDelete
  2. Super explanation sir .thank u 4 support our society

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement