Ad Code

Responsive Advertisement

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்

சென்னைஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி  நடத்தஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்சென்னையில் தனியார் நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்பினர்அப்போதுஅவர் கூறியதாவது:


ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்அதிக அளவில் உள்ளனர்அதனால் தகுதித் தேர்வு நடத்த தேவைஇருக்காது என்று எண்ணினோம்ஆனால்ஒவ்வொரு ஆண்டும் தேர்வுநடத்த வேண்டும் என்று விதி உள்ளதால்இந்த ஆண்டுஇடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்)ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடக்கும்.


இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும்இது தவிர,மேனிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளனஇந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement