Ad Code

Responsive Advertisement

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..

ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது. மிகச்சிறிய பட்டை நமது புகைப்படங்கள் மட்டுமில்லாமல் வீடியோ, பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.

நம் நினைவுகளை பல நாட்கள் கழித்து மீண்டும் திரும்ப பார்க்க புகைப்படங்கள் வழி செய்கின்றன. இது போல் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் மெமரி கார்டில் இருந்து அழிந்து போனால் அதனை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..

முதலில் செய்யக் கூடாதவை:

மெமரி கார்டில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள் அழிந்து போனதை உறுதி செய்ததும், மெமரி கார்டினை எதுவும் செய்யாதீர்கள். புகைப்படங்களை புதிதாக சேமித்து வைப்பது, மெமரி கார்டினை ஸ்கேன் செய்வது போன்றவற்றை செய்ய கூடாது.

ரிக்கவரி மென்பொருள் தேவை:

அடுத்து ஆன்லைனில் கிடைக்கும் 'ரிக்கவரி சூட்', அதாவது அழிந்து போனவற்றை மீட்க பிரத்தியேகமாக கிடைக்கும் மென்பொருளினை டவுன்லோடு செய்ய வேண்டும். விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினியாக இருப்பின் ரெக்குவா மென்பொருளையும், மேக் இயங்குதளம் கொண்டிருக்கும் பட்சத்தில் போட்டோரெக் மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

இவை இரண்டும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் ஆகும். இவை இல்லாமல் பல்வேறு மென்பொருள்களும் சந்தையில் கிடைக்கின்றன.

இன்ஸ்டால்:

நீங்கள் கணினியில் டவுன்லோடு செய்த மென்பொருளினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதன் பின் புகைப்படங்களை மீட்க துவங்க முடியும்.

ரெக்குவா மென்பொருள்:

விண்டோஸ் இயங்குதளத்தில் ரெக்குவா இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின் நீங்கள் தொலைத்த தரவு எது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ரெக்குவா மென்பொருளில் அனைத்து தரவுகள், புகைப்படங்கள், இசை, கோப்புகள், வீடியோ, சுறுக்கப்பட்டவை மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மீட்க முடியும்.

பின் நீங்கள் பார்க்க வேண்டிய இடத்தை ரெக்குவா தெரிவிக்கும் வரை மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து கார்டு ரீடரை கணினியில் இணைத்து, உங்கள் கேமரா புகைப்படங்களை பதிவு செய்யும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவேலை வேறு ஃபைல்களை மீட்க முயற்சித்து அவை மீட்கப்படவில்லை எனில் ரெக்குவாவின் "Switch to advanced mode" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த அனைத்து தரவுகளையும் மீட்க முடியும்.

அழிந்து போன அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து பின் ரிக்கவர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ரிக்கவர் செய்யப்பட்ட ஃபைல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

போட்டோரெக் மென்பொருள்:

போட்டோரெக் மென்பொருளை ஸ்டார்ட் செய்து, பாஸ்வேர்டு கேட்கப்படும் பட்சத்தில் பதிவு செய்து தொடர வேண்டும். பின் நீங்கள் மீட்க வேண்டிய ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து என்டர் பட்டனை கிளிக் செய்து FAT16/32 தேர்வு செய்து, மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து அடுத்த மெனுவிற்கு செல்ல வேண்டும். இனி அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த ஆப்ஷனில் நீங்கள் பல்வேறு ஃபைல்களை கையாள வேண்டியிருக்கும். ஒரு வேலை மெமரி கார்டு கரப்ட் ஆகி இருந்தால் "Whole" தேர்வு செய்ய வேண்டும். கரப்ட் ஆகாத பட்சத்தில் "Free" ஆப்ஷனை கிளிக் செய்யலாம். மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து மீட்கப்பட்ட புகைப்படங்களை சேமிக்கும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். இதனை உறுதி செய்ய C பட்டனை கிளிக் செய்து, ரிக்கவரியை துவங்கலாம்.

இனி ஸ்கேன் செய்து மீட்கப்பட்ட ஃபைல்களை பார்க்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த புகைப்படங்களை பார்க்க முடியும். முந்தைய மெனுவில் புகைப்படங்களை மட்டும் ரிக்கவர் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் ஃபைல்களின் பெயர் JPEG என்ற ஃபார்மேட்டில் காணப்படும்.

ஒருவேலை வேறு ஃபைல் ஃபார்மேட் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் மெனுவின் "FileOpts" கமாண்ட் பயன்படுத்தி சில ஃபைல்களை தேடலாம். சில ஃபைல்கள் .tiff என நிறைவுற்றிருப்பதை பார்க்க முடியும்.

இனி மீட்கப்பட்ட ஃபைல்களை பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement