Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சரிடமும், முதல்வரின் தனிப் பிரிவிலும் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, கணினி ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க வேண்டும். தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஒரு கணினி ஆசிரியரையாவது நியமிக்க வேண்டும்.

2006-ஆம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில், கணினி பாடப்பிரிவை கொண்டு வர வேண்டும். இதனால், அரசு பள்ளியில் பயிலும் கிராம ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், வேலையில்லாமல் இருக்கும் 39,000 பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி குடும்பங்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement