Ad Code

Responsive Advertisement

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு 'வாபஸ்'

வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற முந்தைய முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.


பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8- ஆம் தேதி அன்று புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று அறிவித்தார். மேலும் மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ருபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் மார்ச்-31 ஆம் தேதி தகுந்த விளக்கம் அளித்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கொடுக்கப்பட்ட கால அவகாசமான் மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், 50 ஆயிரம் ருபாய்  அபராதமும் விதிப்பது என்றும், இதற்காக அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது சிறைதண்டனை  என்ற முடிவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement