Ad Code

Responsive Advertisement

விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு!

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.

ஆனால் வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி முழுமையாக தரப்படும். தற்போது அடிப்படை சம்பளம் போன்றே படிகளையும் பாதியாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் தொலை துார கல்வி மூலம் பல்கலைகளில் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., ல் 90 நாட்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்காக ஆசிரியர்கள் அரைச்சம்பள விடுப்பு எடுத்து வந்தனர். தற்போது படி பாதியாக குறைக்கப்பட்டதால் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement