Ad Code

Responsive Advertisement

தமிழ் ஆசிரியர்கள் பணி வரன்முறை ஐந்தாண்டு காத்திருப்புக்கு தீர்வு

பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள், 2,000 பேர், ஐந்தாண்டு காத்திருப்புக்கு பின், பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், 2011 முதல், பல கட்டங்களாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

அவர்களை பணி வரன்முறை செய்வதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், தமிழ் தவிர, இதர பாட ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர்; தமிழ் ஆசிரியர்கள் மட்டும் வரன்முறை செய்யப்படவில்லை.

இதனால், அரசின் சலுகைகள் கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டனர்; அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, 2011 முதல், 2015 வரையில் நியமிக்கப்பட்ட, பட்டதாரி தமிழ் ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, பள்ளிக்கல்வித் துறை, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

இதனால், 2,000 ஆசிரியர்கள் பலனடைவர். 'பணி வரன்முறை உத்தரவால், தமிழ் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பயிற்சி காலம் முடிவுக்கு வரும். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊக்க ஊதியம், உயர்கல்வி ஊக்க ஊதியம் போன்ற சலுகைகள் கிடைக்கும்' என, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement