Ad Code

Responsive Advertisement

TET : ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.   

ஆசிரியர் தேர்வு வழக்கு

ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை 
ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் இந்த தேர்வில் கலந்துகொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

எழுத்துபூர்வ வாதம்

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக எழுத்துபூர்வ வாதங்களை தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். 8 பக்கங்கள் கொண்ட அந்த வாதத்தில், ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் நடைமுறை எதுவும் மீறப்படவில்லை என்றும், தமிழக அரசு வெயிட்டேஜ் முறையில் இடங்களை நிரப்புவதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement