Ad Code

Responsive Advertisement

TET : 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?

நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையை கொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

அதே போல சமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement