Ad Code

Responsive Advertisement

இலவச மின்சாரம்: ரசீதில் தெரிவித்தது வாரியம்

வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, மின் கட்டண ரசீதில் தெரிவிக்கும் நடைமுறையை, மின் வாரியம் துவக்கி உள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியத்தின், மின் கட்டண மையங்களில், கட்டணம் செலுத்தும் போது, ரசீது வழங்கப்படுகிறது. முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை, மே மாதம் துவக்கி வைத்தார்.

குழப்பம் : இதன்படி, 100 யூனிட் இலவசம் போக, மீதி மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, ரசீதில் தெரிவிக்கவில்லை. மொத்த கட்டணம் மட்டும் தெரிவிக்கப்பட்டது. இதனால், எவ்வளவு கழிக்கப்படுகிறது என்ற விபரம் தெரியாமல், நுகர்வோர் குழப்பம் அடைந்தனர். தற்போது, அந்த விபரத்தை ரசீதில், மின் வாரியம் தெரிவித்து வருகிறது. 

பதிவு : இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளில், 100 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தினால், கட்டணம் கிடையாது; 500 யூனிட்டிற்கு கீழ், 200 ரூபாய்; அதற்கு மேல் பயன்படுத்தினால், 350 ரூபாயும் கழிக்கப்படும். கட்டண மையங்களில், அந்த தொகையை கழித்து, மீதி பணம் வாங்கப்பட்டது. மென்பொருள் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், அந்த விபரத்தை ரசீதில் தெரிவிக்கவில்லை. தற்போது, கழிக்கப்படும் தொகை விபரம் ரசீதில் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement