Ad Code

Responsive Advertisement

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். 

இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

மாநிலங்கள் நிலை என்ன? :


*கர்நாடகா: பள்ளிக் கல்வியில், அனைத்து மாணவர்களும், எட்டு ஆண்டுகளாவது படிக்கும் படி, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்* ஆந்திரா: ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதை மாற்றம் செய்தால், 'பெயில்' செய்யப்படும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவர் * தெலுங்கானா: மாணவர்கள்தேர்வு பயமின்றி பள்ளிக் கல்வியை முடிக்க, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதில் மாற்றம் கூடாது
* மஹாராஷ்டிரா: மாணவர்கள், சமூகத்தில் சுய மரியாதையுடன் தலை நிமிர, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும். மாநிலங்கள், தற்போது பின்பற்றும் முறையில் மாற்றம் கூடாது.இவ்வாறு 

இந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகம்,கடைசி நேரத்தில் அறிக்கை சமர்ப் பித்ததால்,அதை மத்திய அரசு வெளியிட வில்லை.கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ஆல் பாஸ் திட்டம் தொடர, தமிழக அரசு விருப்பம் தெரிவித்ததாக கூறப் படுகிறது.தென் மாநிலங்களில் கேரளாவும், புதுச்சேரியும், ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement