Ad Code

Responsive Advertisement

எல்காட் 'இ - சேவை' மையங்களிலும் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்

தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ - சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர முடிவுசெய்துள்ளது

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், அரசின் சான்றிதழ்கள், உதவி திட்டம் உள்ளிட்ட, 90க்கும் மேற்பட்ட சேவைகள், 10 ஆயிரம், இ - சேவை மையங்கள் மூலம், மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அவற்றை, தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்கள் நிர்வகித்து வருகின்றன.அரசு கேபிள், 'டிவி' மற்றும் எல்காட் நடத்தும் மையங்களில், சில மதிப்பு கூட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், 302, இ - சேவை மையங்களில், 25 ரூபாய் செலுத்தினால், கிரெடிட் கார்டு வடிவில், பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் புகைப்பட அட்டை தரப்படுகிறது. 

ஒரு மாதத்தில், 18 ஆயிரம் பேர், பயன் பெற்றுஉள்ளனர். மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால், எல்காட் நிர்வகிக்கும், 361, இ - சேவை மையங்களிலும், இந்த சேவையை அமல்படுத்த உள்ளோம். இதை, மத்திய அரசின் இணையதள சேவைகளில் ஒன்றான, 'அப்னா' வழியே செயல்படுத்தலாமா அல்லது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து பெறலாமா என, ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement