Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 5,500 தொடக்கப் பள்ளிகள்; 3,700 மெட்ரிக்; 5,000 மழலையர்; 660 சி.பி.எஸ்.இ., உட்பட மொத்தம், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. 

இவற்றில் படிக்கும், 50 லட்சம் பேரில் பெரும்பாலான மாணவர்களை, தனியார் வாடகை வாகனங்களே, பள்ளிக்கு அழைத்து வருகின்றன. இதற்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேன் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காவிரி பிரச்னைக்காக, செப்., 16ல் நடந்த வேலை நிறுத்தத்தில், தனியார் பள்ளி வாகன சங்கத்தினர் பங்கேற்றனர்.அதனால், தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளி வாகனங்களை கட்டுப்படுத்த, கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை, பள்ளி வாகனங்கள் எனகூற முடியாது; அவை வாடகை வாகனங்கள். அரசு உருவாக்கிய, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளை, இந்த வாகனங்கள் பின்பற்றவில்லை.எனவே, இந்த வாகனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் வந்துள்ளது.அதன்படி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பொருட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும். அவசர வழி, 'சீட் பெல்ட்' அமைக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் கண்டிப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தனியார் வாகனங்களுக்கு, பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தி, தடையில்லா சான்றிதழ் பெற உத்தரவிட வேண்டும்.

இந்த சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளே, பாதுகாப்பு விதிகளுக்கு பொறுப்பு என உத்தரவிட வேண்டும்.எஸ்.அருமைநாதன் , மாநில தலைவர், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்.பள்ளி வாகன விதிகளை அப்படியே, தனியார் வாகனங்களுக்கும் கொண்டு வர வேண்டும். இதேபோல், இலவச பஸ் பாஸ் வழங்கும் தமிழக அரசு, மற்ற மாநிலங்களை போல், பாதுகாப்பு விதிகளை கொண்ட வாகனங்களை மட்டுமே, மாணவர்களுக்காக இயக்க வேண்டும்.கே.ஆர்.நந்தகுமார், பொதுச்செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகள் சங்கம்.மஞ்சள் வண்ணத்தை தவிர, மற்ற விதிகளை பின்பற்றி வருகிறோம். ஆட்டோக்களுக்கு, அரசே இன்னும் விதிகளை ஏற்படுத்தவில்லை. பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை போல், விதிகளை கொண்டு வந்தாலும், அதை மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பின்பற்றதயாராக உள்ளோம்.

வி.வைரசேகர், தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன கூட்டமைப்புநலச் சங்கம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement