Ad Code

Responsive Advertisement

பேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

பள்ளிக்கல்வித் துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது; விண்ணப்பப் பதிவு, ஜூலை, 30ல் முடிந்தது. பரிசீலனையில், 194 பேரின் விண்ணப்பங்கள், தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதில், 57 வயது வரையுள்ளோர்
விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. 

ஆனால் ஒருவர், ஓய்வு பெறும், 58 வயதில் விண்ணப்பித்து உள்ளார். இதேபோல், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர் பணிக்கு, ஆக., 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன; வரும், 7ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இந்த பதவிக்கு, ஏற்கனவே, 2014ல் முதற்கட்ட அறிவிப்பு வெளியான போது பலர் விண்ணப்பித்தனர். அவர்களில், 12 பேர் உட்பட மொத்தம், 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement