Ad Code

Responsive Advertisement

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!


மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?

டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.




கூகுள்-ஸியோமி கைகோர்ப்பு

சாம்சங் நிறுவனம் ஓக்குலஸுடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அதே போல், லெனோவோ நிறுவனம், ANT நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் தொழில்நுட்பக் கண்ணாடிகளை வழங்குகிறது. இந்நிலையில் மெ.நி கருவிகள் உருவாக்கத்தில், சீனாவின் ஸியோமி நிறுவனம் கூகுளுடன் கைகோர்த்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில், ஆரம்பித்த ஷியோமியின் வளர்ச்சி, ஸ்மார்ட் ரைஸ் குக்கர், ஏர் ப்யூரிஃபயர் என வேறு தளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டின் கூகுள் டெவலப்பர், மாநாட்டில் ஸியோமியின் தலை தென்பட்டதிலிருந்து, நிச்சயம் ஸியோமி கூகுளுடன் இணைந்து சில கருவிகளை வெளியிடும், என்ற யூகம் பரவி வந்தது..

முக்கிய அம்சங்கள்

வரவிருக்கும் ஸியோமி மெ.நி ஹெட்செட்,  கூகுளின் முந்தைய வெளியீடுகள் போலல்லாமல்  மிகச்சிறந்த உணர்வுபூர்வ அனுபவத்தை ஆன்ட்ராய்டு போன்களின் வழியே அளிக்கக்கூடியது. இக்கருவியுடன் தூண்டில் அல்லது ஸ்டீரிங் (steering) வடிவ இயக்க உணர்வு (motion sensor) ரிமோட் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. கூகுள் ஆண்ட்ராய்டு, இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான நௌகட்(nougat)-ஐ கொண்ட போன்களிலும் செயல்படும் வகையில் தயாராகி இருக்கிறது, இந்த ஹெட்செட்.

இந்த ஹெட்செட் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் மற்ற ஸியோமி தயாரிப்புகளைப் போலவே குறைந்த விலை கொண்டிருக்கும் என்று நம்பலாம். அதற்கு ஏற்றார் போல், ஷியோமி நிறுவனம், புதுரக மொபைல் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- ரா.கலைச்செல்வன்
(மாணவப் பத்திரிகையாளர்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement