Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: சட்டசபையில் அமைச்சர் நிலோபர் தகவல்

வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்களில், 60 சதவீதம் பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



தி.மு.க., - எழிலரசன்: வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 85 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்ட பின், 48,155 பேருக்குவேலை வழங்கப்பட்டதாககூறப்பட்டுள்ளது. இது, ஒரு சதவீதம் கூட இல்லை.

அமைச்சர் பன்னீர்செல்வம்: கடந்த, 2012 முதல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் தவிர, பொதுவான பணியிடங்களுக்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்டே, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அமைச்சர் நிலோபர் கபில்: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, 85 லட்சம் பேரில், 60 சதவீதம் பேர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள்; அவர்கள் மேற்படிப்பு படித்து வருகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டு களில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 77,696 பேர் வேலைபெற்றுள்ளனர்.

ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 பேர்; தனியார் நிறுவனங்கள் மூலம், 1.42 லட்சம் பேர்; அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் போன்றவற்றின் மூலம், ஐந்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement