Ad Code

Responsive Advertisement

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது.

அதன் விபரம்:

* காலிப் பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல் செய்ய வேண்டும். ஒரு ஆசிரியருக்கு மாறுதல் தருவதற்காக, எக்காரணம் கொண்டும், மற்றொரு ஆசிரியரை மாற்றக் கூடாது

* காலியிடங்கள் விபரம், ஆதிதிராவிடர் நல இயக்குனர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத் தகவல் பலகையில், கலந்தாய்வு நடப்பதற்கு, மூன்று நாட்களுக்கு முன் ஒட்ட வேண்டும்

* ஆசிரியர்கள், தங்களுடைய விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள், கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது

* கணவன் அல்லது மனைவி திடீரென விபத்திலோ அல்லது நோய்வாய்பட்டோ இறந்தால், அத்தகைய ஆசிரியர்கள் குறித்த நிகழ்வுகளில், விதிமுறைகளை கடைபிடிக்காமல், மாறுதல் வழங்கலாம்

* மாணவியர் விடுதிக்கு காப்பாளர்களாக, பெண்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும். ஆண்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கக்கூடாது

* கலந்தாய்வு நாளன்றே மாறுதல் உத்தரவு அளிக்கப்பட வேண்டும்

* ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பட்டதாரி ஆசிரியர்கள், விடுதி காப்பாளராக நியமனம் செய்யப்பட கூடாது

* அனைத்து பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை, ஆக., 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement