Ad Code

Responsive Advertisement

சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..

சென்னை : 7 வது சம்பள கமிஷன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கேட்ட அளவிற்கு மத்திய அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. விலைவாசி உயர்விற்கு ஏற்றவாறு சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஆரம்ப சம்பளம் ரூ.23,000 ஆக இருக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 18,000 ஆக மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதனால் விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement