Ad Code

Responsive Advertisement

தேர்வு நிலை : ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது

'ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 


இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், 6% அளவுக்கு ஊதியம்வ ழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு

பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement