Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. 


விருதுநகர் மாவட்டம், நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் ஆர்.சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்ஆர்வி எக்சல் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர் தலா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்களுடன் 50 மாணவ, மாணவியர் 2வது இடம் பிடித்தனர். 497 மதிப்பெண்களுடன் 244 பேர் 3வது இடத்தைப் பிடித்தனர். 


98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் டூ தேர்விலும் ஈரோடு மாவட்டம்தான் முதலிடம் பிடித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 98.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட தேர்ச்சி 94.25 சதவீதம். திருவள்ளூர் மாவட்டம் - 90.84 சதவீதம், காஞ்சிபுரம் 92.77 சதவீதம், திருவண்ணாமலை 89.03 சதவீதம், கடலூர் - 89.13 சதவீதம், விழுப்புரம் 88.07 சதவீதம், தஞ்சாவூர்-95.39 சதவீதம், திருவாரூர் - 89.33 சதவீதம், நாகப்பட்டனம் - 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். இந்த பட்டியலில், 86.49 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. பிளஸ்டூ தேர்வு முடிவுகளிலும் வேலூர் மாவட்டம் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement