Ad Code

Responsive Advertisement

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம் : மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து உள்கட்டமைப்பையும் சீர்செய்து வைத்திருக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில், அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து, ஜுன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. 


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, மின்சாரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பையும் சீர்செய்து வைத்திருக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார். குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள், காலணிகள், மிதிவண்டி, மடிக்கணினி என அனைத்துத் தேவைகளையும் முதலமைச்சர் வழங்கி வருகிறார்.



இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் முதல் நாளன்றே, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. பா. பென்ஜமின் தலைமையில், சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு வழங்குவதற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு. கண்ணப்பன் ஆய்வு செய்தார்.



பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மின் இணைப்புகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என்றும், துப்புரவுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கல்வியாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவ - மாணவிகள் கடந்த ஆண்டில் பயன்படுத்திய பேருந்து பயண அட்டைகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement