Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்

அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் உடுமலை மலையாண்டிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஜனனி முதலிடம் பிடித்துள்ளார்.


10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாக கொண்டு படித்தவர்களில் உடுமலைப்பேட்டை மலையாண்டிப்பட்டினம் எம்.சி. அரசுப் பள்ளி மாணவி ஜனனி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த 50 மாணவர்களில் இவரும் ஒருவர்.



மூன்றாம் இடத்தை 500-க்கு 495 மதிப்பெண் பெற்று ஈரோடு அரசுப் பள்ளி மாணவி ஹரினி, புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவு பவதாரணி, புதுக்கோட்டை ராணி அரசுப் பள்ளி மாணவி நிஷாத் ரஹிமா, கரூர் மலைகோவிலூர் அரசுப் பள்ளி மாணவர் சந்திரசேகர், திருவண்ணாமலை பெருங்காட்டூர் அரசுப் பள்ளி மாணவி மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசுப் பள்ளி மாணவி தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசுப் பள்ளி மாணவி கேத்தரின் அமலா ராகினி ஆகியோர் பிடித்துள்ளனர்.


இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஸ்வேதா, வேலூர் மாவட்டம் சோழிங்கர் டிஎம்டி எத்திராஜம்மாள் அரசுப் பள்ளி மாணவி நேஹா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement