Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.


இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வெள்ளிக்கிழமை (மே 27) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையநிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.


தேர்வுக் கட்டணம்: தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, கூடுதல் கட்டணம் ரூ.35, ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.135 ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.



தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு:
தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையம், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.



பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement