Ad Code

Responsive Advertisement

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.

அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது...
ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன்4-ஆம் தேதி கடைசி நாளாகும்.



ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்...

Post a Comment

1 Comments

  1. This is one of the most incredible article I've read in a really long time. I hope you update this blog often because I’m anxious to read more about. cotton single bedsheet online , bridal bed sheets in karachi

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement