Ad Code

Responsive Advertisement

100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்தது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின் கட்டண சலுகை எவ்வளவு கிடைக்கும்? அதிகாரி விளக்கம்

தமிழக முதல்- அமைச்சராக 6-வது முறையாக ஜெயலலிதா கடந்த 23-ந் தேதி பதவி ஏற்றார்.


இலவச மின்சாரம்

பதவி ஏற்ற உடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.



அதில் ஒன்று, அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்பதாகும். இந்த இலவச மின்சார திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,607 கோடி கூடுதல் செலவு ஆகும்.



2 மாத கணக்கீட்டு முறை
தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் அளவை கணக்கிட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 



தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள் 78 லட்சத்து 55 ஆயிரம் உள்ளன. 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 55 லட்சத்து 36 ஆயிரம் ஆகும். 201 முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 49 லட்சத்து 66 ஆயிரம்.



500 யூனிட் மின்சாரத்துக்கும் மேல் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். ஆக மொத்தம் ஒரு கோடியே 90 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.



கட்டண சலுகை எவ்வளவு?

இலவச மின்சார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக் கும் (மின் இணைப்பு) எவ்வளவு கட்டண சலுகை கிடைக் கும் என்பது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



இதுவரை 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் 100 யூனிட் மின்சாரத்துக்கும் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 என்றும், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் செலுத்தி வந்தனர். இனி அவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.



200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்திய கட்டணத்தை விட ரூ.150 குறைவாக செலுத்துவார்கள். 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் ரூ.200 மிச்சப்படுத்தலாம். 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.380 மிச்சம் ஆகும்.



நிரந்தர கட்டணம்
* உதாரணமாக 120 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 20 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.30-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். 



* 160 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 60 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.90-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும். 



* 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.150-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.170 செலுத்த வேண்டும். 



300 யூனிட் மின்சாரம்

* 250 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 150 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 50 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.150-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.380 செலுத்த வேண்டும். 



* 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 200 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.300-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.530 செலுத்த வேண்டும்.



* 450 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 350 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 250 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.750-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.980 செலுத்த வேண்டும். 



500 யூனிட் மின்சாரம்
* 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 400 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.900-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.1,130 செலுத்த வேண்டும்.



* 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 700 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3.50 என்ற வீதத்தில் ரூ.350-ம், அடுத்த 300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.4.60 வீதம் ரூ.1,380-ம், அடுத்த 300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.6.60 வீதம் ரூ.1,980-ம், நிரந்தர கட்டணமாக ரூ.50-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.3,760 செலுத்த வேண்டும். 



மொத்த கட்டணம் 

* 1,100 யூனிட் பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 1,000 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3.50 என்ற வீதத்தில் ரூ.350-ம், அடுத்த 300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.4.60 வீதம் ரூ.1,380-ம், அடுத்த 600 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.6.60 வீதம் ரூ.3,960-ம், நிரந்தர கட்டணமாக ரூ.50-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.5,740 செலுத்த வேண்டும். 



பழைய மின்சார கட்டணப்படி, 120 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்கள் ரூ.200 மின் கட்டணமாக இதுவரை கட்டி வந்தார்கள். அதேபோல, 160 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.260-ம், 200 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.320-ம், 250 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.580-ம், 300 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.730-ம், 450 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ,1,180-ம், 500 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.1,330-ம், 650 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.3,120-ம், 800 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.4,110-ம், 950 யூனிட் பயன்படுத்தியவர் கள் ரூ.5,100-ம், 1,100 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.6,090-ம் இதுவரை மின் கட்டணமாக செலுத்தி வந்தார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement