Ad Code

Responsive Advertisement

ஜூலை 29ல் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு: மூன்று நாட்கள் நடக்கிறது

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.  ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு தொகுதி-1ல் அடங்கிய 74 காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.  


தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர். அதில் 4,033 பேர் முதன்மை எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் ஜீலை மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும்.


இதேபோல் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையில் காலியாக உள்ள 270 உதவி புள்ளி ஆய்வாளர் பணியிடத்துக்கு கடந்த ஆண்டு ஜீலை மாதம் 11ம்  தேதி தேர்வு நடத்தப்பட்டத்தில் 19,130 பேர் கலந்து கொண்டனர். அதில் 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி சான்றிதழ்  சரிபார்ப்பு நடத்தப்படும். 


நூலகம், உதவி நூலகர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் 2,352 பேர் கலந்து கொண்டனர்.  அதில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 9, 10ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement