பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம். 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவர்கள் படிப்புக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும். கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
ஆன்-லைனில் பதிவு: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் ஏப்ரல் 25 முதல் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய மே 9 கடைசித் தேதியாகும். பின்னர் அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து "செயலர், பகுதி நேர பொறியியல் சேர்க்கை, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 641 014' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவுக் கட்டணம்: விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணம் ரூ.300-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150 ஆகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை