Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: ஏப்.24-இல் பயிற்சி வகுப்பு.

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 12,800 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) நடைபெறுகிறது.மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,685 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 முதல் 25 வாக்கு சாவடிகள் ஒரு மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவின்போது, ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் ஒரு வாக்கு சாவடி அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர்கள் 4 பேர் பணியில் இருப்பர். இதுதவிர, பதற்றமான வாக்கு சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.


வாக்கு சாவடி பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12,800 பேர் நியமிக்கப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இவர்களுக்கான முதல்கட்டப்பயிற்சி வகுப்பு, பேரவைத் தொகுதி வாரியாக தொகுதிக்கு உள்பட்ட ஏதாவதொரு பள்ளி அல்லது கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.தொகுதியின் தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வகுப்பை நடத்துவர்.அஞ்சல் ஓட்டுச்சீட்டு: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



அதன் அடிப்படையில், முதல்கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளில் அஞ்சல் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்கான பணிகளை, தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.வேட்புமனு விண்ணப்பங்கள்: வேட்புமனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், வேட்பாளர்கள்பலரும் வேட்புமனு விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். அந்தந்தத் தொகுதிகளின் தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் வழங்கப்படுகின்றன.
 மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதில் இணைக்க வேண்டிய படிவங்களைத் தயார் செய்வதற்காக, வேட்பாளர்கள் பலரும் இப்போதே வேட்புமனு விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.தயாராகும் அலுவலகங்கள்: தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறும். வேட்பாளர் உள்பட 5 நபர்கள் மனு தாக்கல் செய்யும்போது அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் உடன் வருவோர் எளிதில் வந்து செல்லும் வகையில், தேர்தல் அலுவலர் அலுவலகங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement