Ad Code

Responsive Advertisement

முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார்.




ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில் அவரது தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் பெங்களூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றார்.



பின்பு இவரது தாய் வேதவல்லி சென்னை மாகாணம் சென்று தமிழ் திரை உலகில் சந்தியா என்னும் பெயரில் நடிகையாக நடித்து வந்தார். சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கினார் ஜெயலலிதா அவர்கள். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளார்.



ஆரம்ப காலத்தில் இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்ற போதும் இவரது தாயின் தூண்டுதலினால் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். இவர் 1970 மற்றும் 80-களில் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை.திரையில் மாபெரும் நடிகையாக ஜொலித்த ஜெயலலிதா அவர்கள் பின்னாளில் எம்.ஜி.ஆர். அவர்களின் துணையினால் அரசியலிலும் நுழைந்தார். திரையில் மட்டுமில்லாது அரசியலும் பல சாதனைகள் புரிந்து பெருந்தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. இங்கு அவரை பற்றிய நீங்கள் அறியாத சில அறிய தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது…



இயற்பெயர் 
ஜெயலலிதா அவர்களின் அவரது தாய் தந்தை வைத்த இயற்பெயர் கோமளவல்லி ஆகும்.



பரதநாட்டியம்
தனது 3 வது வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுகொண்டார் ஜெயலலிதா.



நடிப்புத்துறை
ஜெயலலிதாவிற்கு ஆரம்பத்தில் நடிப்பில் நாட்டம் இல்லை. அவரது அம்மா நடிகை சந்தியா அவர்களின் தூண்டுதலினால் தான் நடிப்பு துறையினுள் வந்தார் ஜெயலலிதா.



படிப்பில் சுட்டி
சிறுவயது முதலே படிப்பில் சுட்டியாக இருந்த ஜெயலலிதா அவர்கள், அவரது மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்.



முதல் திரைப்படம் 
இவர் நடித்த முதல் திரைப்படமே ‘வயது வந்தோருக்கான’ படமாக அமைந்தது. இதில் அவர் இளம் விதவை பெண்ணாக நடித்ததாக கூறப்படுகிறது.


எம்.ஜி.ஆர். 
புகழ்பெற்ற நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர். உடன் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதா அவர்களை அரசியலுக்கு அழைத்து வந்ததே எம்.ஜி. ஆர், தான் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆங்கில திறன் 
ஆங்கில புத்தகங்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஜெயலலிதா. எப்போது பயணம் மேற்கொள்ளும் போதும் நிறைய புத்தகங்களை தன்னுடன் எடுத்து செல்வார்.



எழுத்தாளர்
தமிழில் நன்கு எழுதும் திறன் கொண்டவர் ஜெயலலிதா. “தாய்” தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.


சில்வர் ஜுபிலி
நாயகி தமிழ் நடிகைகளில் அதிக வெள்ளி விழா படங்களில் (80) நடித்த நடிகை எனும் சாதனைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. இவர் தெலுங்கில் நடித்த 28 படங்களுள் வெள்ளி விழா படங்கள். இவர் நடித்த ஒரே இந்தி படமும் (Izzat) வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.



உதவும் கரங்கள்
ஜெயலலிதா கல்விக்கு உதவுவதில் சிறந்தவர். இவர் உதவி செய்து படித்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போதிலும், மேலும் படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார். மீண்டும் அவருக்கு உதவி செய்து பொறியியல் படிக்க வைத்து, இப்போது அவர் பில்லியன் டாலர்களில் லாபம் சம்பாதித்து வரும் ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.



பாடகி
இதுவரை ஜெயலலிதா 10 பாடல்களை பாடியுள்ளார். அதில் அதிகபட்சமாக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் 5 பாடல்களை பாடியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement