Ad Code

Responsive Advertisement

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான இணைய வழி போட்டிகள், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 2297 பேர் பங்கேற்றனர். தகுதி அடிப்படை யில், இறுதி சுற்றுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுக்கான இறுதி கட்ட போட்டிகள், சென்னை எல்காட் நிறுவனத்தில் நடைபெற்றது. ஐ.சி.டி.ஏ.சி.டி., நிறுவனத்தின்சிறப்பு நடுவர்கள் படைப்புகளை ஆய்வு செய்தனர்.அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தேனாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தர்மராஜ் முதலிடம் பிடித்து, தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செய லாளர் ராமச்சந்திரன், ஐ.சி.டி. கூட்டமைப்புத் தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆசிரியர் தர்மராஜுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
ஆஸ்திரேலியா அரசின் தெற்காசிய துணைச் செயலாளர் ஜான் பொன்னார், ஆட்டோடெஸ்க் அமைப்பின் நிர்வாகி மிக்கி மேக்மேனஸ், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஹெட்ச் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து ஆசிரியர் தர்மராஜ் கூறும்போது, “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள கடினமான பாடப் பகுதிகளை, முழுமையாக வீடியோ மற்றும் அனிமேஷன் பாடத் தொகுப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement